தங்கம் விலை உயர்வு pt web
தங்கம்

தொடரும் விலை ஏற்றம்.. ஒரே வாரத்தில் ரூ.5,000 வரை விலை உயர்ந்த தங்கம்!

தங்கம் விலை முந்தைய வாரத்துடன் ஒப்பிடுகையில் இந்த வாரம் பெரும் ஏற்றத்தை சந்தித்தது.

PT WEB

தங்கம் விலை தொடர்ந்து உயர்வை கண்டுவரும் நிலையில், இந்த வாரத்தில் மட்டும் ரூ.5000 வரை விலை உயர்ந்துள்ளது.. இது கடந்த வாரத்துடன் ஒப்பிட்டு பார்த்தால் உயர்வு அதிகமாக இருந்துள்ளது..

ஒரே வாரத்தில் 5000 ரூபாய் வரை உயர்வு..

கடந்த 8-ஆம் தேதி சவரனுக்கு 90 ஆயிரத்து 400 ரூபாயாக இருந்த தங்கம், கடந்த 13ஆம் தேதி வியாழக்கிழமை 95 ஆயிரத்து 200 ஆக உயர்வு கண்டது. அதாவது நான்கு நாட்களில் சவரனுக்கு 4 ஆயிரத்து 800ரூபாய் உயர்வு கண்டது. அதன் பிறகு விலை குறையத் தொடங்கியது.

சனிக்கிழமை நிலவரப்படி தங்கம் சவரனுக்கு 92 ஆயிரத்து 400 ரூபாயாகவும் கிராம் 11 ஆயிரத்து 550ஆக உள்ளது. மொத்தமாக, முந்தைய வாரத்துடன் ஒப்பிடுகையில் இந்த வாரம் தங்கம் 2ஆயிரம் ரூபாய் ஏற்றத்தில் உள்ளது. வெள்ளி விலையும் இந்த வாரம் ஏற்றம்கண்டது.

தங்கம் விலை

கடந்த 8ஆம் தேதி கிலோவுக்கு 1லட்சத்து 65 ஆயிரமாக இருந்த வெள்ளிவிலை, கடந்த 13ஆம் தேதி 1 லட்சத்து 83ஆயிரமாக ஏற்றம்கண்டது. அடுத்தடுத்த நாட்களில் சரிவுகண்டது. சனிக்கிழமை நிலவரப்படி, ஒருகிலோ வெள்ளி 1 லட்சத்து 75 ஆயிரம்ரூபாயாகவும் கிராம் 175 ரூபாயாகவும்உள்ளது. மொத்தமாக முந்தையவாரத்துடன் ஒப்பிடுகையில் இந்த வாரம்வெள்ளி கிலோவுக்கு 10 ஆயிரம் ரூபாய்உயர்ந்துள்ளது.

நேற்று ரூ.1,500 வரை குறைந்த விலை

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ஆயிரத்து 520 ரூபாய் குறைந்துள்ளது. அதன்படி தங்கம் கிராமுக்கு 190 ரூபாய் குறைந்து 11 ஆயிரத்து 550 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு சவரன் 92 ஆயிரத்து 400 ரூபாய்க்கு விற்பனையானது.

தங்கம்

அதே போல் வெள்ளி ஒரு கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து 175 ரூபாய்க்கும், ஒரு கிலோவுக்கு 5,000 ரூபாய் குறைந்து 1 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.