சென்னையில் தங்கத்தின் விலை ஒரே நாளில் இரண்டு முறை உயர்ந்துள்ளது. சவரனுக்கு 1040 ரூபாய் உயர்ந்து, 76280 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. உலக பொருளாதார மாற்றங்கள், பணவீக்கம் மற்றும் அரசியல் பதற்றங்கள் காரணமாக முதலீட்டாளர்கள் தங்கத்தில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி மற்றும் மந்தநிலை காரணமாக தங்கத்தின் தேவை அதிகரிக்கிறது.
இன்று ஒரே நாளில் தங்கம் இரண்டு முறை உயர்த்தப்பட்டிருக்கிறது. சென்னையில் ஆபரணத்தங்கம் விலை ஒரே நாளில் சவரன் 1040 ரூபாய் உயர்ந்திருக்கிறது. தற்போது தங்கம் , 76280 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. கிராமிற்கு 130 ரூபாய் உயர்ந்து, 9535 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே தங்கத்தின் விலை அதிவேகமாக உயர்ந்து வருகிறது. கடந்த சில மாதங்களில் இந்தியாவில், தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ. 1,03,380 (24கேரட்) வரை வளர்ச்சி அடைந்துள்ளது. இது கடந்தாண்டில் உள்ள விலையைவிட 15% அதிகமாகும். உலகம் முழுவதும் பொருளாதார மாறுபாடுகள், பணவீக்கம் மற்றும் அரசியல் பதற்றங்கள் காரணமாக தங்கத்தின் மீது முதலீட்டாளர்கள் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். Recession பீதியில் பங்குச்சந்தை முதலீடுகளை விடவும் தங்கம் பாதுகாப்பானது என்பதால், தங்கத்தில் முதலீடு குவிகிறது.
அமெரிக்காவில் மத்திய வங்கியின் வட்டி விகிதம் குறைக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு, முதலீட்டாளர்கள் தங்கத்தை விரும்பத் தூண்டியுள்ளது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வகையில் வீழ்ச்சி கண்டிருக்கிறது. 88.28 ரூபாய் என்கிற நிலைக்கு ரூபாயின் மதிப்பு தள்ளப்பட்டிருக்கிறது. இந்தியாவிலும் சீனாவிலும் பொருளாதார சிக்கல்கள் மற்றும் மந்தநிலை காரணமாக, தங்கத்தின் தேவை தொடர்ந்து அதிகரிக்கிறது. இதனால், தங்கத்தின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து காணப்படுகிறது.
இந்த உயர்விற்கான முக்கிய காரணிகள் பணவீக்கம், அரசியல் பதற்றம் மற்றும் முதலீட்டாளர்களின் பாதுகாப்பு தேவையாகும்.
தங்கத்தின் விலை 2025-ஆம் ஆண்டில் தொடர்ந்து உயர வாய்ப்பு இருப்பதாக நிபுணர்கள் கூறுகிறார்கள்.