தங்கம் web
தங்கம்

சரியும் தங்கம் விலை.. எதுவரை குறைய வாய்ப்பு.. மீண்டும் எப்போது அதிகரிக்கும்?

தங்கத்தின் விலை கடந்த சில மாதங்களாகவே தொடர் உச்சம் தொட்டு வந்த நிலையில், தற்போது சவரனுக்கு ரூ.2,400 குறைந்துள்ளது..

PT WEB

தங்கத்தின் விலை கடந்த சில மாதங்களாகவே தொடர் உச்சம் தொட்டு வந்த நிலையில், தற்போது சவரனுக்கு ரூ.2,400 குறைந்துள்ளது..

உலகில் மிக பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை மக்கள் கருதுவதால்தான், பொருளாதாரம் மற்றும் அரசியல் நெருக்கடி சமயங்களில் தங்கத்தில்அதிக முதலீட்டை குவித்து வருகின்றனர்.

தங்கம் விலை

தற்போது அமெரிக்க அதிபர் ட்ரம்பின் வரிவிதிப்பால் சர்வதேச அளவில் பொருளாதார நிச்சயமற்ற சூழல் காணப்படும் நிலையில், முதலீட்டாளர்கள் தங்கத்தில் முதலீடுசெய்து வருகின்றனர். உலகில் தங்க சேமிப்பில் இந்தியர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். இதனால், தங்கம் விலை உயரும் போது தங்கத்தைசேமித்து வைத்திருக்கும் இந்திய குடும்பங்களின் செல்வ மதிப்பும் உயர்கிறது.

விலை மாற்றத்தின் பலன் மற்றும் பாதிப்பு என்ன?

தற்போது சீனா, இந்தியா உள்ளிட்டநாடுகளின் மத்திய வங்கிகள் டாலரின் சார்பை குறைக்க தங்கத்தை அதிகஅளவில் கொள்முதல் செய்துவருகின்றன. இந்தச் சூழலில் தங்கம் விலை உயரும்போது ரிசர்வ் வங்கியின் அந்நிய செலாவணியின் பகுதியாக இருக்கும் தங்க கையிருப்பும் உயர்ந்து நாட்டின் நிதி நிலைமைக்கு வலுவூட்டுகிறது. அதேசமயம், தங்கம் விலை உயர்வால் பாதிக்கப்படுவதும் மக்கள்தான்.

தங்கம் விலை

இந்திய கலாச்சாரத்தில் தங்கம் இன்றியமையாத ஒன்றாக உள்ளது. திருமணம் உட்பட சுபநிகழ்வுகளில் தங்க நகைகளின் பயன்பாடு மிகமுக்கியமானதாக உள்ளது. இந்நிலையில் புதிதாக தங்க நகைகள் வாங்க நினைக்கும் மக்கள், அதன் விலை உயர்வால் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். இரண்டாவது, இந்தியா அதன் தங்கம்தேவையில் 80 சதவீதம் இறக்குமதியையே சார்ந்து இருக்கிறது. தங்கத்தின் விலை உயரும் போது இந்தியா இறக்குமதிக்கு செலவிடும் அந்நிய செல்வாணி அளவும் அதிகரிக்கிறது. அதிக இறக்குமதி, நாட்டின் வர்த்தகப் பற்றாக்குறையை அதிகரிக்கும்.

தங்க விலை நிலவரம்

இதன் தொடர்ச்சியாக ரூபாயின் மதிப்பும் வலுவிழக்கும். எப்படியானினும், தங்கம் பாதுகாப்பான முதலீடாக மட்டுமல்ல, அதிக லாபம் தரக்கூடியதாகவும் இருப்பதால், எவ்வளவு விலை உயர்ந்தாலும் தங்கத்தின் முக்கியத்துவம் குறைவதே இல்லை.

சரிந்த தங்கத்தின் விலை..

தொடர்ந்து உயர்ர்ந்துவரும் தங்கவிலை, தற்போது சவரனுக்கு 2,400 ரூபாய் குறைந்துள்ளது. காலை நிலவரப்படி சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரனுக்கு ஆயிரத்து 440 ரூபாய் குறைந்து 96 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு 180 ரூபாய் குறைந்து 12 ஆயிரம் ரூபாயாக உள்ளது. தங்கம் விலை நேற்று காலை சவரனுக்கு 2 ஆயிரத்து 80 ரூபாய் உயர்ந்த நிலையில், மாலையில் சரிந்தது.

இந்த சூழலில் தங்கம் விலை மேலும் சவரனுக்கு 2,400 ரூபாய் குறைந்து 93,600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு 300 ரூபாய் குறைந்து 11 ஆயிரத்து 700 ரூபாயாக விற்கப்படுகிறது..

கடந்த காலத்தில் இல்லாதவகையில் தங்கம் விலை அதிகளவில் குறைந்துள்ள நிலையில், இன்னும் எத்தனை நாட்களுக்கு குறைய வாய்ப்பிருக்கிறது என்று கோல்ட் குரு விரிவாக பேசியுள்ளார்.