Digital Gold vs Gold Jewellery  pt web
தங்கம்

டிஜிட்டல் தங்கம் vs தங்க நகைகள்.. தங்கத்தை எப்படி வாங்கினால் லாபம் தரும்? எது சிறந்த முதலீடு?

புத்திசாலித்தனமாக முதலீடு செய்ய நினைப்பவர்கள் தங்கத்தை எப்படி சேமிக்க வேண்டும்? எந்த வகையான தங்க முதலீடு சிறந்தது? முதலீட்டிற்கு டிஜிட்டல் தங்கம் சிறந்ததா? அல்லது தங்க நகைகள் சிறந்ததா? என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்..

Vaijayanthi S

தங்கம் எப்போதுமே இந்தியாவில் மதிப்புமிக்க உலோகமாகவும் முதலீடாகவும் இருந்து வருகிறது.. அப்படிப்பட்ட இந்த தங்கத்தை நகையாகவும் நாணயமாகவும் முதலீட்டாளர்கள் வாங்கி குவித்து வருகின்றனர்.. ஆனால் தற்போது எல்லாமே டிஜிட்டல் மயமாக மாறிவிட்டது.. அதிலும் தங்கம் வாங்குவது கடந்த சில ஆண்டுகளில், டிஜிட்டல் மயமாகிவிட்டது.

Paytm, PhonePe மற்றும் Groww போன்ற பல தளங்களில் தங்கத்தை டிஜிட்டல் முறையில் வாங்கி சேமித்து வைக்க ஏதுவாக இருக்கின்றன.. அதுவும் இந்த டிஜிட்டல் முறையில் ரூ.10 மதிப்புள்ள தங்கத்தைக்கூட வாங்க முடியும்.. சமீபகாலமாக இந்தியாவில் தங்கத்தின் விலை வேகமாக அதிகரித்து வருகிறது.. அதனால் முதலீட்டாளர்கள் சற்று பதட்டமாகவே இருக்கிறீர்கள். தங்கத்தை வாங்கலாமா வேண்டாமா என்பதை விட அதை எப்படி வாங்குவது என்பதுதான் தற்போது பெரிய கேள்வியாக இருக்கின்றது..

Gold coins

புத்திசாலித்தனமாக முதலீடு செய்ய நினைப்பவர்கள் தங்கத்தை எப்படி சேமிக்க வேண்டும்? எந்த வகையான தங்க முதலீடு சிறந்தது? முதலீட்டிற்கு டிஜிட்டல் தங்கம் சிறந்ததா? அல்லது தங்க நகைகள் சிறந்ததா? என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்..

டிஜிட்டல் கோல்டு என்பவை டிஜிட்டல் வடிவில் ஆன்லைனில் இருக்கும் தங்கம். அதாவது, நமக்கு தேவைப்படும் போது இதனை ஆன்லைனில் விற்று பணமாக்கலாம் அல்லது தங்கமாக மாற்றி பெற்றுக்கொள்ளலாம். இதன் காரணமாக மொபைல் செயலி மூலம் 10 ரூபாய் முதல் பல லட்சங்கள் வரை தங்கத்தில் முதலீடு செய்யலாம்..

அதே நேரத்தில் தங்க நகைகள் அலங்காரத்திற்காக அல்லது கலாச்சாரம் மற்றும் சமூக மதிப்பிறக்காக மட்டுமே வாங்கப்படுகின்றன. அதனால் முதலீட்டாளார்கள் டிஜிட்டல் தங்கம் வாங்குவதே சிறந்ததாக இருக்கும் என வல்லுநர்கள் பலரும் கூறுகின்றனர்.. அதுமட்டுமல்லாமல் அதன் மறுவிற்பனையின் மதிப்பும் குறையும். தங்க நகைகள் குறைவான தூய்மையானவையே. அந்த நகைகளில் செம்பு, வெள்ளி, துத்தநாகம், நிக்கல், பல்லேடியம் மற்றும் பிளாட்டினம் ஆகியவை கலக்கப்படுகின்றன.. . தங்கத்துடன் இந்த உலோகங்களைக் கலப்பதன் மூலம் அதன் மதிப்பு குறையும்.. ஆனால் அது வலிமையாகவும் உறுதியாகவும் நீண்டு உழைக்கக்கூடியதாகவும் இருக்கும்..

Gold Rate Chennai

அதுமட்டுமல்லாமல் நகையாக தங்கத்தை வாங்கும் போது அதற்கான செலவும் அதிகம். அத்துடன் லாக்கர் போன்ற பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும், திருட்டு போகும் என்ற அச்சம் இருக்கும்.. மேலும் டிஜிட்டல் மற்றும் நகையாக தங்கத்தை எப்படி வாங்கினாலும் இரண்டுக்கும் ஒரே மாதிரியாக வரி விதிக்கப்படுகின்றன. நீங்கள் மூன்று ஆண்டுகளுக்குள் விற்றால், உங்கள் வருமானத்தில் ஆதாயங்கள் சேர்க்கப்பட்டு, உங்கள் அடுக்குப்படி வரி விதிக்கப்படும். மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, விற்கப்பட்டால் குறியீட்டுடன் 20 சதவீத நீண்ட கால மூலதன ஆதாய வரி பொருந்தும். இதில் டிஜிட்டல் தங்கம் கூடுதல் வரிச் சலுகையை வழங்காது.

நீங்கள் வசதிக்காகவோ, எளிதாகக் கண்காணிக்கவோ அல்லது சிறிய சேமிப்புக்காகவோ முதலீடு செய்தால், டிஜிட்டல் தங்கம் சிறந்தது எனவும் .. பாதுகாப்பானதாகவும் ஆனால் நீங்கள் தங்க நகைகளை வாங்க விரும்பினால் அதை பயன்படுத்தலாம் அல்லது பிரியமானவர்களுக்கு பரிசளிக்கலாம் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

Gold

அதனால் தங்கத்தை முதலீடு செய்ய விரும்பினால் டிஜிட்டலாக வாங்குவது சிறந்தது.. இந்த டிஜிட்டல் தங்கம் என்பது நவீன சேமிப்பாளர்களுக்கானது, அவர்கள் வசதியையும் விரைவான அணுகலையும் விரும்புகிறார்கள். ஆனால் இந்த டிஜிட்டல் தங்கத்தில் முதலீடு செய்யும் போது மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுமென இந்திய பத்திரங்கள் மற்றும் பங்கு பரிவர்த்தனை வாரியம் ஆன செபி (SEBI) அறிவுறுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..