திரவ வடிவிலான தங்கத்தை இறக்குமதி செய்வதற்கு மத்திய அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
தங்கத்தை கூழ் வடிவில் திரவங்களுடன் கலந்து சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்படுவதாக தெரிகிறது. தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில் இருந்து சில இறக்குமதியாளர்கள் திரவ வடிவில் தங்கத்தை இறக்குமதி செய்யவதாக வெளிநாட்டு வர்த்தகத்திற்கான பொது இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
இனி தங்கத்தை திரவத்தில் மிகச்சிறிய துகள்களாக கரைத்து இறக்குமதி செய்வதற்கு தொழில் துறைக்கு மட்டுமே அனுமதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.