சென்னையில் தங்கத்தின் விலை சவரனுக்கு 72 ரூபாய் குறைந்துள்ளது.
சென்னையில் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை குறைந்து வருகிறது. அதன்படி, கடந்த ஞாயிற்றுக்கிழமை சவரன் தங்கம் 35,752 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில், அடுத்தடுத்த நாட்களில் 35,720 ரூபாய்க்கும், 36,296 ரூபாய்க்கும் விற்கப்பட்டது.
இந்நிலையில் இன்று சவரன் தங்கத்தின் விலை 72 ரூபாய் குறைந்து 36,224 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் நேற்று 4,537 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று 4,528 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை சவரனுக்கு 39,296 ரூபாயாகவும் , கிராமுக்கு 4,912 ரூபாயாகவும் உள்ளது.
ஒரு கிலோ வெள்ளியின் விலை 74,600 ரூபாய்க்கும், கிராம் வெள்ளி 74.60 காசுகளுக்கும் விற்கப்படுகிறது.