சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.256 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.39,032-க்கு விற்பனையாகி வருகிறது.
கொரோனா பாதிப்பு பொது முடக்க காலத்திலும் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. உலகளவில் தங்கத்தின் விலை தொடர்ந்து ஏறுமுகத்தை கண்டு வருகிறது. இதனை விலையேற்றம் இந்திய தங்கச் சந்தையிலும் எதிரொலித்து வருகிறது.
சென்னையில் நேற்று ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூ. 38,776 இருந்த நிலையில் இன்று ரூ. 256 உயர்ந்துள்ளது. இதையடுத்து ஒரு சவரன் தங்கத்தின் விலை வரலாறு காணாத வகையில் ரூ.39,032-க்கு விற்பனையாகிறது. இன்று ஒரே நாளில் கிராமுக்கு ரூ.32 உயர்ந்து, ரூ.4,879-க்கு விற்பனை செய்யப்படுகின்றன.
மேலும் ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று ரூ. 67,400 இருந்த நிலையில் இன்று வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.66,600-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.66.60க்கு விற்பனை செய்யப்படுகிறது.