வணிகம்

ஒரு சவரன் 30 ஆயிரத்தை தாண்டியது : தங்க விலை புதிய உச்சம்

ஒரு சவரன் 30 ஆயிரத்தை தாண்டியது : தங்க விலை புதிய உச்சம்

webteam

தங்க நகையின் விலை வரலாற்றில் இல்லாத வகையில் ரூ.30 ஆயிரத்தை தாண்டி புதிய உச்சத்தை அடைந்தது.

நேற்று முன்தின நிலவரப்படி, 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு 11 ரூபாய் விலை உயர்ந்து 3 ஆயிரத்து 729 ரூபாய்க்கும், ஒரு சவரன் 88 ரூபாய் விலை ஏற்றம் கண்டு 29 ஆயிரத்து 832 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து நேற்று காலையில் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 29,744-க்கு விற்பனையான நிலையில், மாலையில் 29,832-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில் இன்று தங்க விலை சவரனுக்கு மேலும் ரூ.288 உயர்ந்து ரூ.30 ஆயிரத்தை தாண்டியது. புதிய விலை உயர்வின் படி, ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.30,120 ஆகும். கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ரூ.3,765 ரூபாய்க்கு விற்பனையாகிறது. கடந்த 40 நாட்களில் மட்டும் சவரனுக்கு தங்கத்தின் ரூ.3,640 உயர்ந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2.60 உயர்ந்து, ரூ.55.20க்கு விற்பனை செய்யப்படுகிறது.