வணிகம்

44 ஆயிரத்தை நெருங்கும் ஒரு சவரன் தங்கத்தின் விலை!!

44 ஆயிரத்தை நெருங்கும் ஒரு சவரன் தங்கத்தின் விலை!!

webteam

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 43 ஆயிரத்தை தாண்டி விற்பனையாகிறது. 3‌8 நாட்களில் 6 ஆயிரத்து 448 ரூபாய் அதிகமாக விலை உயர்ந்துள்ளது.

ஜூலை மாதம் ஒன்றாம் தேதியன்று தங்கம் ஒரு சவரன் ரூ.37,392க்கு விற்கப்பட்டது. தொடர்ந்து 6ஆம் தேதி தங்கத்தின் விலை ரூ.36,880 ஆக குறைந்தது. அடுத்து வந்த ஜூலை 23ஆம் தேதி ஒரு சவரன் ரூ.‌38,776-க்கும், ஜூலை 24ஆம் தேதி ஒரு சவரன் ரூ39,032-க்கும் விற்பனையானது.

ஜூலை 27ஆம் தேதியன்று ஒரு சவரன் 40 ஆயிரம் என்ற வரலாற்று உச்சத்தை தாண்டி, ரூ.40,104-க்கு விற்பனையானது. ஆகஸ்ட் 4ஆம் தேதி ஒரு சவரன் ரூ.41,664க்கும், ஆகஸ்ட் 5ஆம் தேதி ஒரு சவரன் ரூ.42,408-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் தற்போது சவரன் ரூ.43,328-க்கு விற்பனையாகிறது.