சென்னையில் தங்கத்தின் விலை இரண்டாவது நாளாக புதிய உச்சத்தில் நீடிக்கிறது.
இன்று காலை நிலவரப்படி 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு 17 ரூபாய் விலை உயர்ந்து 3 ஆயிரத்து 832 ரூபாய்க்கும், ஒரு சவரன் 136 ரூபாய் விலை
ஏற்றம் கண்டு 30 ஆயிரத்து 656 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளியின் விலை கிராமிற்கு 40 காசுகள் விலை குறைந்து 51 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இரண்டு நாட்களில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு 768 ரூபாய்
விலை அதிகரித்துள்ளது.