சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 632 ரூபாய் உயர்ந்து 30,520 ரூபாயை அடைந்துள்ளது.
நாள்தோறும் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்தை அடைந்து வருகிறது. இதில் விலை சரிவை விட, கிடுகிடு உயர்வே அதிகமாக இருக்கிறது. இந்நிலையில் பொங்கல் பண்டிகை மற்றும் தை மாதத்தின் திருமண நாட்கள் வரவுள்ள நிலையில் தங்கத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.79 உயர்ந்து ரூ.3815 என்ற புதிய உச்சத்தை அடைந்துள்ளது.
இதற்கிடையே வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து 51.40 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஈராக்கில் அமெரிக்கா நடத்திய ஏவுகணை தாக்குதலால் கச்சா எண்ணெய், தங்கம் விலை உயர்ந்துள்ளது. மேலும், சர்வதேச சந்தையில் பிரெண்ட் கச்சா ஒரு பீப்பாய் 2 டாலர் உயர்ந்து 68.21 டாலரானது.