வணிகம்

41 ஆயிரத்தை கடந்த தங்கத்தின் விலை – அதிர்ச்சியில் பொதுமக்கள்.

41 ஆயிரத்தை கடந்த தங்கத்தின் விலை – அதிர்ச்சியில் பொதுமக்கள்.

Veeramani

இன்று ஆபரணத்தங்கத்தின் விலை கிராமிற்கு 32 ரூபாய் உயர்ந்து 5ஆயிரத்து 125 ரூபாயாக அதிகரித்துள்ளது. மேலும் ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை 256 ரூபாய் உயர்ந்து 41 ஆயிரம் ரூபாய் என்ற புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

கடந்த சில நாட்களாகவே கிடுகிடுவென தங்கத்தின் விலை அதிகரித்து வருகிறது. நேற்றும், இன்றும் மட்டுமே  ஒரு சவரன் தங்கத்தின் விலை ஐநூறு ரூபாய்க்கு மேலாக அதிகரித்துள்ளது. தினமும் தங்கத்தின் விலை உயர்ந்துகொண்டே வருவதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்.