வணிகம்

ஏப்.20: சென்னையில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 360 குறைவு!

webteam

சென்னையில் தங்கத்தின் விலை சவரனுக்கு 360 ரூபாய் குறைந்துள்ளது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், இன்று தங்கத்தின் விலை சவரனுக்கு 360 ரூபாய் குறைந்து 35,600 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. நேற்று சவரன் தங்கத்தின் விலை 35,960 ரூபாயாக இருந்தது. கிராம் தங்கம் நேற்று 4,495 ரூபாய்க்கு விற்கபட்ட நிலையில், இன்று 4,450 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

24 கேரட் தங்கத்தின் விலை

24 கேரட் தங்கத்தின் விலை நேற்று 38,832 ரூபாயாக இருந்த நிலையில், இன்று 38,472 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. கிராம் தங்கத்தின் விலை நேற்று 4,854 ரூபாயாக இருந்த நிலையில் இன்று 4,809 ரூபாயாக உள்ளது.

வெள்ளி விலை

ஒரு கிலோ வெள்ளி 73,600 ரூபாய்க்கு விற்கப்படும் நிலையில் ஒரு கிராம் வெள்ளி 73 ரூபாய் 60 காசுகளுக்கு விற்கப்படுகிறது.