வணிகம்

மார்ச்.3: சென்னையில் மீண்டும் உயர்ந்த தங்கம் விலை

மார்ச்.3: சென்னையில் மீண்டும் உயர்ந்த தங்கம் விலை

webteam

சென்னையில் தங்கத்தின் விலை சவரனுக்கு 56 ரூபாய் அதிகரித்துள்ளது.

சென்னையில் கடந்த சில நாட்களாக ஆபரணத் தங்கத்தின் விலை அதிகரித்து வந்த நிலையில், நேற்று தங்கத்தின் விலை சவரனுக்கு 488 ரூபாய் குறைந்தது. அதன்படி 34,288 ரூபாய்க்கு தங்கம் விற்கப்பட்டது. இந்நிலையில் இன்று தங்கத்தின் விலை சவரனுக்கு 56 ரூபாய் அதிகரித்துள்ளது.

ஒரு கிராம் தங்கத்தின் விலை நேற்று 4,286 ரூபாய்க்கு விற்கபட்ட நிலையில், இன்று 4,293 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. 24 கேரட் தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு 37,392 ரூபாய்க்கு விற்கபட்ட நிலையில், இன்று 37,448 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை நேற்று 4,674 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில் இன்று 4,681 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளியின் விலை 73,000 ரூபாயாகவும், ஒரு கிராம் வெள்ளியின் விலை 73 ரூபாயாகவும் உள்ளது.