வணிகம்

பிப்.11: சென்னையில் சவரனுக்கு 128 ரூபாய் குறைந்த தங்கம் விலை

webteam

சென்னையில் தங்கத்தின் விலை குறைந்துள்ளது.

சென்னையில் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை குறைந்து வருகிறது. நேற்று முன் தினம் சவரன் தங்கத்தின் விலை 36,296 ரூபாயாக இருந்த நிலையில், நேற்று 36,176 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

இந்நிலையில் இன்று தங்கத்தின் விலை சவரனுக்கு 128 ரூபாய் குறைந்து 36,048 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. நேற்று ஒரு கிராம் தங்கம் 4,522 ரூபாயாக இருந்த நிலையில், இன்று 4,506 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

24 காரட் தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு 39,248 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று 39,120 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளியின் விலை 72,900 ரூபாய்க்கும், கிராம் வெள்ளி 72.90 காசுகளுக்கும் விற்கப்படுகிறது.