வணிகம்

சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை சரிவு

PT WEB

சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை குறைந்துள்ளது.

இன்று காலை நிலவரப்படி, 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு 21 ரூபாய் விலை குறைந்து 4,548 ரூபாய்க்கும், ஒரு சவரன் 168 ரூபாய் விலை இறங்கி 36,384 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி கிராமிற்கு 30 காசுகள் குறைந்து 73 ரூபாய்க்கு விற்பனையாகிறது.