வணிகம்

தங்கம் மற்றும் வெள்ளி விலை உயர்வு: இன்றைய நிலவரம் என்ன?

JustinDurai
சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இன்று அதிகரித்துள்ளது.
இன்று காலை நிலவரப்படி, 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு 25 ரூபாய் விலை உயர்ந்து 4 ஆயிரத்து 525 ரூபாய்க்கும், ஒரு சவரன் 200 ரூபாய் விலை அதிகரித்து 36 ஆயிரத்து 200 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. வெள்ளி கிராமிற்கு 20 காசுகள் விலை உயர்ந்து 69 ரூபாய் 10 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.