வணிகம்

மந்தநிலைக்குள் நுழைந்த இந்தியப் பொருளாதாரம்: ரிசர்வ் வங்கி அதிகாரி தகவல்

Veeramani

கடந்த ஜூலை-செப்டம்பர் காலகட்டத்தில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 8.6 சதவிகிதம் சுருங்கியுள்ளது, அதாவது இந்த நிதியாண்டின் முதல் பாதியில் இந்தியா வரலாற்றில் முதல் முறையாக மந்தநிலைக்குள் நுழைகிறது.

கொரோனா பொதுமுடக்கத்தின் தளர்வுகளுக்கு பிறகு  இந்தியாவின் பொருளாதாரம் வேகமாக முன்னேறிவருகிறது, இருப்பினும் இரண்டாம் காலாண்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி(ஜிடிபி) 8.6 சதவீதமாக சுருங்கியுள்ளது என்று ரிசர்வ் வங்கி சார்பிலான அதிகாரபூர்வ கட்டுரை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2020-21 ஆம் ஆண்டின் முதல் பாதியிலேயே மிகப்பெரிய அளவில் சரிந்த ஜிடிபி, அதன் வரலாற்றில் முதல் முறையாக தொடர்ந்து இரண்டு காலாண்டுகளாக தொழில்நுட்ப மந்தநிலைக்குள் நுழைந்துள்ளது என்று மதிப்பீடு சுட்டிக்காட்டுகிறது என்று ரிசர்வ் வங்கியின் அதிகாரி ஒருவர்  தனது மாதாந்திர கட்டுரையில் எழுதியுள்ளார்.

கடந்த 27 மாத பொருளாதார புள்ளிவிபரங்களை கண்காணிக்கும் ஒரு பொருளாதார செயல்பாட்டுக் குறியீடு, மே / ஜூன் மாதங்களிலிருந்து தற்போது பொருளாதாரம் வீரியமாக மீண்டுள்ளது என்பதைக் காட்டியது.

"கடந்த ஜூலை-செப்டம்பர் காலகட்டத்தில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 8.6 சதவிகிதம் சுருங்கியுள்ளது, அதாவது இந்த நிதியாண்டின் முதல் பாதியில் இந்தியா வரலாற்றில் முதல் முறையாக மந்தநிலைக்குள் நுழைகிறது. கொரோனா தாக்கம் காரணமாக இரண்டு தொடர்ச்சியான காலாண்டுகளின் எதிர்மறை வளர்ச்சியால் இந்நிலை ஏற்பட்டுள்ளது" என்று ரிசர்வ் வங்கியின் நாணயக் கொள்கை துறையின் பங்கஜ் குமார் தெரிவித்துள்ளார்.