வணிகம்

ரூ.15,000 முதல் ரூ. 45,108 வரை அதிரடி ஆஃபர் வழங்கும் ஹோண்டா கார் நிறுவனம்!

EllusamyKarthik

2021-ஆம் ஆண்டிற்கு விடை கொடுக்கும் இறுதி நாட்களை நெருங்கிக் கொண்டிருக்கிறோம். ஆண்டிறுதி காரணமாக பல ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தங்கள் வாகனங்களுக்கு ஆஃபர்களை அள்ளி வழங்கிக் கொண்டிருக்கிறது. வரும் 2022-ஆம் ஆண்டு ஜனவரி முதல் கார்களின் விலைகள் உயர்த்தப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது. இத்தகைய சூழலில் கார் வாங்க விரும்புவர்களுக்கு இதுவே சரியான நேரம் என வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். 

ஹோண்டா கார் இந்திய நிறுவனம் டிசம்பர் மாதத்தை முன்னிட்டு அறிவித்துள்ள அதிரடி சலுகைகள் குறித்து பார்க்கலாம். ரூ.15,000 முதல் ரூ.45,108 வரை சலுகளைகளை அள்ளிக் கொடுக்கிறது இந்த ஜப்பான் நாட்டை சேர்ந்த கார் தயாரிப்பு நிறுவனம். 

ஹோண்டா அமேஸ் (அனைத்து கிரேடுகளுக்கும்) 15000 ரூபாய் சலுகை, ஹோண்டா சிட்டி (4th ஜெனரேஷன் பெட்ரோல் எஞ்சின் - அனைத்து கிரேடுகளுக்கும்) 22000 ரூபாய் சலுகை, ஹோண்டா WR-V (பெட்ரோல் எஞ்சின் - அனைத்து கிரேடுகளுக்கும்) 28000 ரூபாய் சலுகை, ஹோண்டா ஜாஸ் (பெட்ரோல் எஞ்சின் - அனைத்து கிரேடுகளுக்கும்) 35,147 ரூபாய் சலுகை, ஹோண்டா சிட்டி (5th ஜெனரேஷன் பெட்ரோல் எஞ்சின் - அனைத்து கிரேடுகளுக்கும்) 48,108 ரூபாய் சலுகை என அறிவித்துள்ளது ஹோண்டா நிறுவனம். 

ரொக்க தள்ளுபடி, கார் எக்ஸ்சேஞ்ச் போனஸ், கார்ப்பரேட் சலுகை, கார் எக்ஸ்சேஞ்ச் தள்ளுபடி, ஹோண்டா வாடிக்கையாளர் லாயல்டி போனஸ் என பல்வேறு விதங்களில் இந்த சலுகை வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதாக தெரிவித்துள்ளது ஹோண்டா. வரும் 31-ஆம் தேதி இந்த சலுகைகள் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு அருகாமையில் உள்ள ஹோண்டா டீலர்களை அணுகவும்.