வணிகம்

3 எலெக்ட்ரிக் வாகனத்தை மாதிரியாக உருவாக்கி உள்ள ஃபாக்ஸ்கான் நிறுவனம்

EllusamyKarthik

தைவான் நாட்டில் பன்னாட்டு நிறுவனங்களுக்காக ஒப்பந்த அடிப்படையில் எலெக்ட்ரானிக் சாதனங்களை உருவாக்கி வரும் ஃபாக்ஸ்கான் நிறுவனம் மூன்று எலெக்ட்ரிக் வாகனத்தை மாதிரியாக உருவாக்கி காட்சிப்படுத்தியுள்ளது. இந்நிறுவனம் ஐபோன்களை உற்பத்தி செய்து வருவதற்காக சர்வதேச அளவில் அறியப்பட்டு வருகிறது. இந்நிலையில் முதன்முறையாக தனது வேலை பாணியில் இருந்து மாறுபட்டு ஃபாக்ஸ்கான் இந்த முயற்சியை முன்னெடுத்துள்ளது. 

எஸ்.யூ.வி, செடான் மற்றும் பேருந்து என மூன்று விதமாக இந்த மாதிரி எலெக்ட்ரிக் வாகனத்தை ஃபாக்ஸ்கான் வடிவமைத்துள்ளது. யூலோன் மோட்டார் நிறுவனம் என்ற என்ற கார் தயாரிப்பு நிறுவனத்துடன் இதற்காக கூட்டு சேர்ந்துள்ளது ஃபாக்ஸ்கான். 

சர்வதேச அளவில் எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியில் தங்களது தடத்தை பதிவு செய்யும் நோக்கில் ஃபாக்ஸ்கான் இதனை மேற்கொண்டுள்ளதாக சொல்லப்படுகிறது. 2022 வாக்கில் எஸ்.யூ.வி காரும், 2023 வாக்கில் செடான் ரக காரும் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

அடுத்த ஆண்டு முதல் ஃபாக்ஸ்கான் பெயரை தாங்கியபடி தைவான் நாட்டில் வலம் வர உள்ளது பேருந்து. இதற்காக உள்ளூர் போக்குவரத்து நிறுவனம் ஒன்றுடன் இணைக்கிறது ஃபாக்ஸ்கான். 

எலெக்ட்ரிக் வாகனங்களை உற்பத்தி செய்வதற்காக அமெரிக்காவில் உள்ள ஒரு மோட்டார் உற்பத்தி நிறுவனத்தை ஃபாக்ஸ்கான் வாங்கியுள்ளதாம். அதே சிப் தடுப்பாட்டு சிக்கலை ஈடுகட்ட சிப்களை உருவாக்கம் செய்யும் உற்பத்திக் கூடம் ஒன்றையும் தைவானில் வாங்கி உள்ளதாம்.