வணிகம்

ஆகஸ்ட் 21ல் ஊடகத்தின் நிலையை அலசும் ’அன்லாக்கிங் மீடியா இன் தமிழ்நாடு’ கருத்தரங்கம்

ஆகஸ்ட் 21ல் ஊடகத்தின் நிலையை அலசும் ’அன்லாக்கிங் மீடியா இன் தமிழ்நாடு’ கருத்தரங்கம்

webteam

ஊடகத்தின் தற்போதைய நிலையை விரிவாக அலசுவதற்காக அன்லாக்கிங் மீடியா இன் தமிழ்நாடு என்ற தலைப்பில் இணையவழி கருத்தரங்கம் ஆகஸ்ட் 21 ஆம் தேதியன்று ஃபோர்த் டைமன்சன் மீடியா சொல்யூசன்ஸ் நிறுவனம் சார்பில் நடைபெறவுள்ளது. இதுதொடர்பாக ஃபோர்த் டைமன்சன் மீடியா சொல்யூசன்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம்:-

ஊரடங்கு காலத்தில் ஊடகங்களின் நிலையை விவாதிக்கும் அன்லாக்கிங் மீடியா இன் தமிழ்நாடு என்ற கருத்தரங்கம் ஒன்றை ஜூலை 29 ஆம் தேதியன்று ஃபோர்த் டைமன்சன் மீடியா சொல்யூசன்ஸ் நிறுவனம் இணையவழியில் வெற்றிகரமாக நடத்தியது.

முதல் கருத்தரங்கின் வெற்றியைத் தொடர்ந்து, மிகப்பெரிய அளவில் அடுத்தகட்ட கருத்தரங்கம் ஆகஸ்ட் 21 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஊரடங்கு காலத்தில் ஊடகங்கள் தங்கள் பணிகளை நிறுத்திக்கொள்ளவில்லை. அதே வேளையில் புதிய பாதைகளைக் கண்டறிவதிலும் சோர்ந்துபோகவில்லை என்பதை ஃபோர்த் டைமன்சன் மீடியா நிரூபித்துள்ளது.

ஏற்கனவே 2018ல் தென்னிந்திய ஊடக கருத்தரங்கம், 2019ல் மொபைல் மற்றும் டிஜிட்டல் மாநாடு என தமிழகத்தில் ஊடகங்கள் மாறிவரும் பருவநிலையை அவை கணிப்பதாக இருந்தன. தற்போதைய நிலையை விரிவாக அலசுவதற்காக அன்லாக்கிங் மீடியா இன் தமிழ்நாடு என்ற தலைப்பில் இணையவழி கருத்தரங்கம் ஆகஸ்ட் 21 ஆம் தேதியன்று மதியம் 2 மணிக்குத் தொடங்கவுள்ளது.

இந்த இரண்டாவது கருத்தரங்கம், புரிந்துகொள்ளமுடியாத நடப்புச் சந்தையின் நிலையை விவாதிப்பதாக இருக்கும். சில பிராண்ட்டுகள் அழிந்துவிட்டன. சில கொரோனா தொற்றையும் தாண்டி தங்களை நிலைநிறுத்திக்கொண்டுள்ளன. புதுமையான தகவல்தொடர்பு வடிவங்கள் மூலம் நுகர்வோர்களைக் கவரக்கூடிய வழிகளை சில நிறுவனங்கள் கற்றுக்கொண்டன. இந்த இணையவழி கருத்தரங்கம் ஊரடங்கு காலத்தில் சந்தையின் தற்போதைய நிலையை புரிந்துகொள்ள உதவியாக இருக்கும்.

இரண்டாவது கருத்தரங்கை ஐடிசி நிறுவனத்தின் மீடியா அண்ட் மக்கள் தொடர்பு தலைவர் ஜெய்கிஷின் சாப்ரூ தலைமைவகித்து நடத்துகிறார். மைண்ட்ஷேர் துணைத் தலைவர் முரளீதர் தியாகராஜன், ஏர்டெல் மீடியா துணைத் தலைவர் அர்ச்சனா அகர்வால், எலைட் ஃபுட்ஸ் நிறுவன இயக்குநர் தானேசா ரகுலால், அலையன்ஸ் விளம்பர நிறுவன தலைமை நிர்வாகி வி. நாராயணன், ரீப்போஸ் மேட்ரஸ் சிஎம்ஓ பாலாஜி வி. மற்றும் ஏஆர்எஸ் ஸ்டீல்ஸ் மார்க்கெட்டிங் ஏஜிஎம் சரத் மோகன் ஆகிய மிக்ச்சிறந்த நிபுணர்கள் பங்கேற்கின்றனர்” என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் "எங்களுடைய முதல் இணையவழி கருத்தரங்கத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. அந்த உற்சாகத்தில் அடுத்த பதிப்பை நடத்துகிறோம். அடுத்தடுத்த மாதங்களில் இதுபோன்ற பல இணையவழி கருத்தரங்களை நடத்தவுள்ளோம் " என்கிறார் ஃபோர்த் டைமன்சன் மீடியா சொல்யூசன்ஸ் நிறுவனத்தின் தலைமை அதிகாரி ஷங்கர்.