வணிகம்

ஆயுத பூஜை: பூக்கள் விலை உயர்வு

ஆயுத பூஜை: பூக்கள் விலை உயர்வு

webteam

ஆயுத பூஜையை முன்னிட்டு தோவாளை மலர்ச் சந்தையில் பூக்களின் விலை அதிகரித்துள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர். 

மாவட்டம் முழுக்க வறட்சி காரணமாக பூக்கள் உற்பத்தி குறைந்ததாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். எனவே தோவாளை மலர்ச் சந்தைக்கு பூக்களின் வரத்து குறைந்துள்ள நிலையில் மல்லிகை, பிச்சி, முல்லை உள்ளிட்ட பூக்களின் வரத்து குறைந்ததால் விலை அதிகரித்துள்ளது‌, பண்டிகை நாட்கள் என்பதால் தோவாளை சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து பூக்கள் வாங்க வரும் மக்கள் விலை அதிகரித்திருப்பது சிரமமாக இருப்பதாகக் கூறுகின்றனர்.