இணையதள வணிக நிறுவனங்களின் முதல்கட்ட பண்டிகைக் கால சிறப்புத் தள்ளுபடி விற்பனை நேற்று முடிந்த நிலையில், கடந்த ஆண்டின் சிறப்பு விற்பனையைவிட 50 சதவிகிதம் விற்பனை அதிகமாக இருந்தாக அமேசான் மற்றும் ப்ளிப்கார்ட் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
அமெரிக்காவைச் சேர்ந்த மின்னணு வர்த்தக நிறுவனமான அமேசான், Great Indian Festival என்ற பெயரில் சனிக்கிழமை முதல் இந்தியாவில் 6 நாள்கள் பண்டிகைக்கால விற்பனையை தொடங்கியது. இதில் ஸ்மார்ட் டிவி உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனை வழக்கமான விற்பனை காலத்தைவிட 10 மடங்கு அதிகரித்ததாக அமேசான் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டைக் காட்டிலும் இப்போது சிறுநகரங்கள், கிராமப்புறங்களில் இருந்து ஆர்டர்கள் 40 சதவிகிதம் அதிகரித்ததாக அமேசான் தெரிவித்துள்ளது. ப்ளிப்கார்ட் மூலம் தங்கள் பொருட்களை விற்ற வர்த்தகர்கள் எண்ணிக்கை 50 சதவிகிதம் உயர்ந்ததாகவும், ஆடை, அலங்காரப் பொருட்கள், வீட்டு உபயோகப் பொருட்களை மக்கள் அதிக அளவில் வாங்கியதாகவும் ப்ளிப்கார்ட் தலைமை அதிகாரி கல்யாண் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்.