வணிகம்

கொரோனா குறித்த தவறான தகவலுக்கு லைக் செய்தால் எச்சரிக்கை வரும் - ஃபேஸ்புக்

கொரோனா குறித்த தவறான தகவலுக்கு லைக் செய்தால் எச்சரிக்கை வரும் - ஃபேஸ்புக்

webteam

கொரோனா குறித்த தவறான பதிவுகளை லைக், கமெண்ட், ஷேர் செய்பவர்களுக்கும் எச்சரிக்கை தகவலை அனுப்ப ஃபேஸ்புக் முடிவு செய்துள்ளது. விரைவில் இந்த இது நடைமுறைக்கு வரும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது

கொரோனாவுக்கு எதிராக உலக நாடுகள் கடுமையாக போராடி வருகின்றன. கொரோனா முன்னெச்சரிக்கையை மக்களிடத்தில் கொண்டு சேர்க்கும் வலுவான ஆயுதமாக ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்கள் உள்ளன. அதேவேளையில் வதந்திகளும் எளிதில் சமூக வலைதளங்கள் மூலம் விரைவாக போய்ச் சேர்கின்றன. எனவே தவறான தகவல்களை கட்டுப்படுத்த ஃபேஸ்புக் நிறுவனம் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக கொரோனா தொடர்பான வதந்திகளுக்கு முற்றுபுள்ளி வைக்க ஃபேஸ்புக் போராடி வருகிறது.

இந்நிலையில் கொரோனா குறித்த தவறான பதிவுகளை லைக், கமெண்ட், ஷேர் செய்பவர்களுக்கும் எச்சரிக்கை தகவலை அனுப்ப ஃபேஸ்புக் முடிவு செய்துள்ளது. விரைவில் இந்த இது நடைமுறைக்கு வரும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது

இது குறித்து தெரிவித்துள்ள ஃபேஸ்புக் முற்றிலும் தவறான, ஆபத்துகளை ஏற்படுத்தும் கொரோனா தொடர்பான பல்லாயிரக்கணக்கான பதிவுகளை நீக்கியுள்ளதாகவும், சந்தேகத்துக்குரிய மில்லியன் கணக்கான பதிவுகளுக்கு எச்சரிக்கை அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.