தீபாவளியை முன்னிட்டு ராயல் என்ஃபீல்ட் பைக் நிறுவனம் தனது புதிய மாடலான ‘பாப்பர் ஸ்டைல்’ பைக் ஒன்றை வெளியிடுகிறது.
ராயல் என்ஃபீல்ட் என்பது நீண்ட வருடங்களாக இருக்கும் பைக் நிறுவனத்தில் ஒன்றாகும். இந்த பைக் முதலில் வயது முதிர்ந்தவர்கள் ஓட்டும் ஒன்றாக இருந்தது. ஆனால் தற்போது இளைஞர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு கொண்ட பைக்கில் ஒன்றாக திகழ்கிறது. இதனை வாங்குவதற்கு இளைஞர்கள் ஆர்வம்காட்டி வருகின்றனர்.
இந்நிலையில் ராயல் என்ஃபீல்ட் தனது புதிய மாடலான பாப்பர் ஸ்டைல் பைக்கின் புகைப்படம் ஒன்றை இன்ஸ்டகிராமில் வெளியிட்டுள்ளது. ஆனால் அதில் பைக் மீது முழுத்திரை போட்டு மூடப்பட்டுள்ளது. அத்துடன் பைக் பற்றிய தகவல்களும் வெளியிடப்படவில்லை. இந்த பைக்கை தீபாவளி அன்று மோட்டோ எக்ஸ்போ 2018ஆம் நிகழ்ச்சியில் ராயல் என்ஃபீல்ட் நிறுவனம் வெளியிடவுள்ளது. கடந்த ஆண்டு மோட்டோ எக்ஸ்போ நிகழ்ச்சியின் போது 650 வின்ஸ் என்ற மாடலை ராயல் என்ஃபீல்ட் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.