வணிகம்

நாட்டின் பொருளாதார ‌வளர்ச்சி 6.5%ஆக சரியும்

webteam

நடப்பு நிதியாண்டில் நாட்டின் பொருளாதார ‌வளர்ச்சி, நான்கு ஆண்டுகளில் இல்லாத அளவில் சரிவை சந்திக்கும் என மத்திய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது.

கடந்த 2016-‌17ம் ஆம் நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.1 சதவீதமாக இருந்தது. இது 2015-16ல் 8 ச‌தவீதமாகவும், 2014-15ல் 7.5 சதவீதமாகவும் இருந்தது. நடப்பு நிதியாண்டில் ‌நான்கு ஆண்டுகளில் இல்லாத வகையில் பொருளாதார வளர்ச்சி 6.5 சதவீதமாக சரிவடையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. கடந்த 2014ம்‌ ஆண்டு பிரதமர் மோடி தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பின்னர் முதல்முறையாக நடப்பு நிதியாண்டில் தான் மிகக் குறைந்த பொருளாதார வளர்ச்சி காண உள்ளது. இதற்கு இந்த ஆட்சியில் கொண்டுவரப்பட்ட பணமதிப்பு நீக்க நடவடிக்கை, ஜிஎஸ்டி அமல் ஆகியவை குறிப்பிட்ட காரணங்களாகக் கருதப்படுகின்றன. தற்போதைய நிலையில் வேளாண் மற்றும் தயாரிப்புத் துறைகளின் செயல்பாடுகள் மோசமாக பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.