tcs, dxc
tcs, dxc twitter
வணிகம்

காப்பி அடிச்சி மாட்டிகிட்டியே பங்கு! டிசிஎஸ் நிறுவனத்துக்கு ரூ.1750.85 கோடி அபராதம்.. நடந்தது என்ன?

Prakash J

நாட்டின் மிகப் பழமையான டாடா குழுமத்தின் ஐடி துறை நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்) அமெரிக்காவில் பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது. சர்வதேச அளவில் மிகவும் பிரபலமான DXC டெக்னாஜிஸ் நிறுவனத்தின் வர்த்தக ரகசியங்களை டிசிஎஸ் திருடியதாகத் தொடரப்பட்ட வழக்கில், அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தின் டாலாஸ் நீதிமன்றம் டிசிஎஸ் தவறு செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டு உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, அந்த நிறுவனத்துக்கு சுமார் 210 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ரூ.1,750 கோடிக்கும் மேல்) அபராத தொகை விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க ஐ.டி. நிறுவனமான DXCஇன் உள்ளடக்கத்தை அணுகிய சில டி.சி.எஸ். ஊழியர்கள் அதிலிருந்த தரவுகளை தங்கள் குழுவுக்காக, அப்படியே காப்பி பேஸ்ட் செய்தது தெரிய வந்ததையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

டி.சி.எஸ். ஊழியர்களில் ஒருவர் DXC ஊழியர் பற்றிய விவரத்தையும் மின்னஞ்சலில் அப்படியே காப்பியடித்தத்தால்தான் இம்மோசடி வெளியே வந்துள்ளதாகத் தெரிகிறது.

இதையும் படிக்க: எச்சரித்த நடுவர்! எதிர்ப்பை மீறி பாலஸ்தீன கொடியுடன் பேட்டை பயன்படுத்திய பாக். வீரருக்கு அபராதம்!