வணிகம்

டிக்டாக்கை கையாள சரியான நிறுவனம் இதுதான் - அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கருத்து

டிக்டாக்கை கையாள சரியான நிறுவனம் இதுதான் - அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கருத்து

webteam

அமெரிக்காவில் டிக்டாக்கை கையாள ஆரக்கிள் நிறுவனம் நல்ல நிறுவனம் என  அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்  கூறியுள்ளார்.

அமெரிக்கா - சீனா இடையிலான வர்த்தகப் போரில் அதிபர் ட்ரம்ப் டிக்டாக்கினை அமெரிக்க நிறுவனத்திற்கு விற்க வேண்டும் என்றும் இல்லையென்றால் டிக்டாக்கிற்கு அமெரிக்காவில் தடைவிதிக்கப்படும் என அறிவித்தார். இதற்கு சீனத் தரப்பில் இருந்து கடும் கண்டனங்கள் எழுந்தன. இதனையடுத்து மைக்ரோசாப்ட் நிறுவனம் டிக்டாக்கை வாங்குவதற்கான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருவதாக கூறியது.

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அமெரிக்க ஆரக்கிள் நிறுவனம் அமெரிக்காவில் டிக்டாக்கை  செயல்படுத்த சரியான நிறுவனம் எனக் கருத்து தெரிவித்துள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் கூறியுள்ளது.