கவர்ச்சிகரமான லாபம் தருவதாகக் கூறும் முதலீடுகளை நம்ப வேண்டாம் என்று பங்குச் சந்தை கண்காணிப்பு வாரியமான செபி எச்சரித்துள்ளது.
எந்த முதலீடாக இருந்தாலும் நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகளை கவனமாக படித்துத் தெரிந்து கொண்ட பிறகே முதலீடு செய்யுமாறு செபியின் துணைப் பொது மேலாளர் சூர்யகாந்த் வலியுறுத்தியுள்ளார். நிதிச் சந்தையில் நிலவும் சராசரி வட்டி விகிதங்களைவிட அளவுக்கு அதிகமான வட்டி மற்றும் லாபம் தருவதாகக் கூறும் முதலீடுகளை நம்பக் கூடாது என்றும் சூர்யகாந்த் எச்சரித்துள்ளார்.