பெட்ரோல், டீசல் விலை இனி குறையும் என பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் அண்மையில் ஏற்பட்ட புயல் காரணமாக பெட்ரோல் விலை உயர்ந்ததாகவும் தற்போது நிலை சீராகிவிட்டதால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்து வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார். இதன் எதிரொலியாக இந்திய சந்தைகளிலும் கடந்த 3 நாட்களாக பெட்ரோல், டீசல் விலை குறைவதாகவும் இந்த போக்கு நீடிக்கும் என்றும் அவர் கூறினார். எனினும் கட்டமைப்புத் திட்டங்களுக்கு நிதி தேவைப்படுவதால் பெட்ரோலிய பொருட்கள் மீதான வரியை குறைக்கும் திட்டம் இல்லை என்றும் பிரதான் தெரிவித்தார்.