வணிகம்

டயாலிசிஸ் கட்டணம் அதிகரிக்கும்: அமைச்சகம் தகவல்

webteam

ஜிஎஸ்டியால் டாயாலிசிஸ் மற்றும் புற்றுநோய் சிகிச்சை கட்டணங்கள் உயரும் என மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

சுகாதாரத் துறை அமைச்சகத்தின் வலைதளத்தில் ஜிஎஸ்டி தொடர்பாக அளிக்கப்பட்ட கேள்விக்கு இவ்வாறு பதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. டயாலிசிஸ் கட்டணங்கள் 5 முதல் 12 சதவிகிதம் வரையிலும், பேஸ்மேக்கர் சிகிச்சை 5.5 முதல் 18 சதவிகிதம் வரையிலும் அதிகரிக்கும். எலும்பு மற்றும் புற்றுநோய் மருத்துவத்துக்கான துணை பொருட்கள் 12 சதவிகிதம் வரை விலை உயரும்.
மற்றொரு கேள்விக்கான பதிலில் உயிர்காக்கும் மருந்துகள், மருத்துவ சாதனங்கள் மற்றும் சுகாதார சேவைகளுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளன என்று கூறப்பட்டுள்ளது.