வணிகம்

5 மணி நேர சார்ஜில் 60 கிலோ மீட்டர் செல்லும் இ-ஸ்கூட்டர்... சிறப்பம்சங்கள் தெரியுமா?

webteam

இ-பைக் உற்பத்தி செய்யும் நிறுவனமான டிடெல் நிறுவனம் Easy Plus எலக்ட்ரிக் கூட்டரை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.

டிடெல் நிறுவனத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில், வெறும் 1,999 ரூபாய் கொடுத்து புக்செய்து கொள்ள முடியும். 250 வாட் மோட்டார் திறன் கொண்ட இந்த ஸ்கூட்டரில் 20 am hr லித்தியம் அயன் பேட்டரி இடம்பெற்றுள்ளது.

இந்த பேட்டரி 4 முதல் 5 மணி நேரங்களில் 100 சதவீத சார்ஜை எட்டிவிடும். ஒரு முறை சார்ஜ் செய்தால் 60 கிலோமீட்டர் வரை பயணிக்கும் இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் அதிகபட்ச வேகம் 25kmph.

மெட்டல் அலாய் புறவடிவமைப்பை கொண்ட இந்த ஸ்கூட்டரில் டிஜிட்டல் வடிவ உபகரணங்கள் கொண்ட பேனல், டியூப்ளஸ் டயர், ட்ரம்ப் ப்ரேக்ஸ் மற்றும் பெடல்ஸ் ஆகியவை இடம்பெறுள்ளது. 170 கிலோ எடை கொண்ட இந்த ஸ்கூட்டர் மெட்டாலிக் யெல்லோ, மெட்டாலிக் சிவப்பு, மெட்டாலிக் கருப்பு, வெள்ளை, கன்மெட்டல் உள்ளிட்ட நிறங்களில் இந்த எலட்டிரிக் ஸ்கூட்டர்கள் கிடைக்கிறது. ஒரு வருட வாரண்டியுடன் கிடைக்கும் இந்த ஸ்கூட்டரின் பேட்டரிக்கு 2 வருடம் வாரண்டி கொடுக்கப்படுகிறது/ 40,000 கிலோமீட்டர். இதன் எக்ஸ் ஷோரூம் விலை 39,999 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.