வணிகம்

தீபாவளி பண்டிகை விற்பனை 10 சதவீதத்திற்கும் மேலாக உயர்வு: இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு!

sharpana

தீபாவளி பண்டிகை கால விற்பனை இந்த ஆண்டு 10 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது என்று அகில இந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

 கடந்த 14 ஆம் தேதி கொரோனா சூழலிலும் இந்தியா முழுக்க தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது. கடந்த மார்ச் 22 ஆம் தேதி முதல் இந்தியாவில் கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் வேலை வாய்ப்பின்றி மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கத்துவங்கினர். இதனால், மக்களின் வாங்கும் திறன் குறைந்ததால், பண்டிகைகளின்போது வணிகங்கள் பெரிதும் பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில், இந்தியாவின் உயர்மட்ட சில்லறை வர்த்தக அமைப்பு தீபாவளி விற்பனை தொடர்பாக தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. தீபாவளி பண்டிகை கால விற்பனை இந்த ஆண்டு 10 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது  என்று தெரிவித்துள்ளது 

நாடு முழுவதும் பல்லாயிரக்கணக்கான வணிக நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்தும், அகில இந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பு கடந்த ஒரு மாதத்தில் மட்டுமே 720 பில்லியன் ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.

 கடந்த எட்டு மாதங்களில் மக்கள் அத்யாவசிய பொருட்களைத் தவிர வேறு எந்த பொருட்களையும் வாங்கவில்லை என்பதால், அவர்களிடம் தீபாவளிப் பண்டிகைக்கென பணம் தனியாக எடுத்து வைத்திருந்தனர். மின் பொருட்கள் முதல் வீட்டு உபயோகப் பொருட்கள் என அத்தனைப் பொருட்களும் இதில் அங்கும். 20 நகரங்களில் இந்தத் தரவுகளை சேகரிக்கப்பட்டது” என்று இதன் பொதுச்செயலாளர் பிரவீன் கண்டேல்வால் தெரிவித்துள்ளார்.