வணிகம்

டிச 19 : சென்னையில் ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை 192 ரூபாய் உயர்வு

webteam

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலையானது 192 உயர்ந்துள்ளது. 

சென்னையில் கடந்த சில நாட்களாக ஒரு சவரன் ( 8 கிராம்) தங்கத்தின் விலையானது 37 ஆயிரத்துக்கும் அதிகமாக காணப்பட்டது. அதிகபட்சமாக நேற்று ஒரு சவரன் தங்கத்தின் விலை 37, 760 ரூபாயாக உயர்ந்தது.

இந்நிலையில் இன்றும் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது. அதன் படி சென்னையில் இன்று ஒரு சவரன் தங்கத்தின் விலையானது 192 ரூபாய் உயர்ந்து தற்போது 37,952 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. நேற்று ஒரு கிராம் தங்கத்தின் விலை 4720 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில், அதன் விலையும் இன்று 24 ரூபாய் உயர்ந்து 4744 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

24 காரட் சுத்த தங்கத்தின் விலையானது நேற்று 5104 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில்,இன்று தங்கம்  5128 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரன் சுத்ததங்கத்தின் விலையானது 41,024 ரூபாயாக உள்ளது. ஒரு கிராம் வெள்ளியின் விலையானது 71 ரூபாயாகவும், சவரன் தங்கத்தின் விலையானது 71500 ரூபாயாக உள்ளது.