வணிகம்

பட்ஜெட்டில் இடம்பெறுமா சிலிண்டர் விலை குறைப்பு..? எதிர்பார்ப்பில் இல்லத்தரசிகள்..!

Rasus

மத்திய நிதிநிலை அறிக்கை இன்று தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், சமையல் கேஸ் சிலிண்டர் அதில் முக்கிய இடம் பிடித்துள்ளது. கேஸ் சிலிண்டருக்கான விலை குறைப்பு சலுகைகளை எதிர்பார்த்து இல்லத்தரசிகள் காத்திருக்கின்றனர்.

கடந்த 2 ஆண்டுகளில் விலை உயரும் அத்தியாவசிய பொருட்களின் பட்டியலில் கேஸ் சிலிண்டர் இருப்பது அனைவர் மத்தியிலும் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. பெட்ரோல், டீசல் விலை உயர்வதை போல கேஸ் சிலிண்டரின் விலையும் உயர்ந்து வருவது மிகவும் வேதனைக்குரியதாக உள்ளதாக பெண்கள் தெரிவிக்கின்றனர்.

300 முதல் ரூ.330 என வாங்கி வந்த சிலிண்டரின் விலை தற்போது மானியம் என்ற பெயரில் ரூ.800 ஆக அதிகரித்துள்ளது. குறிப்பிட்ட மானிய தொகை வங்கிக் கணக்கில் சேர்ந்தாலும் அது போதுமானதாக இல்லை என்றும், தேவையான நேரத்தில் அந்த பணம் உதவியாக இல்லை என்றும் இல்லத்தரசிகள் கவலையுடன் கூறுகின்றனர்.

நிதிநிலை அறிக்கையில் பல்வேறு துறைகள் சார்ந்து சலுகைகள் அறிவிக்கப்பட்டாலும், கேஸ் சிலிண்டர் விலையில் சலுகை தர வேண்டும் என்றே அனைவரும் கோரி‌க்கை வைக்கின்றனர்.