வணிகம்

கொரோனா எதிரொலி: அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு தொடர் வீழ்ச்சி!

EllusamyKarthik

இந்தியாவில் தற்போது ஏற்பட்டுள்ள இரண்டாவது கொரோனா பரவல் அலையினால் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சி அடைந்துள்ளது. கடந்த சில வாரங்களாகவே இந்த வீழ்ச்சி தொடர்ந்து கொண்டு இருப்பதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த இரண்டு வாரங்களில் மட்டுமே 2.6 சதவிகிதம் வீழ்ச்சியை எதிக்கொண்டுள்ளது ரூபாய் மதிப்பு. 

அதனால் அமெரிக்காவின் ஒரு டாலர் சுமார் 75 ரூபாய்க்கு மேல் தற்போது எகிறியுள்ளது. இந்த ஆண்டின் இறுதியில் 76 ரூபாய் வரை கூட இது போகலாம் என நிதித்துறை வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் இந்திய பொருளாதாரமும் பெருமளவில் பாதிப்புக்கு உள்ளாகும் என தெரிகிறது. 

கடந்த 8 மாதங்களில் இல்லாத அளவிற்கு இந்த வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். இந்த ஆண்டின் ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டில் அமெரிக்க டாலருக்கு நிகராக ஆசிய கரன்சியில் சிறந்ததாக இருந்த ரூபாய் தற்போது ஆசிய அளவில் மோசம் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.