வணிகம்

ரூ.4389 கோடி வரி ஏய்ப்பு! விவோவை தொடர்ந்து வரி ஏய்ப்பில் ஈடுபட்டதா ஓப்போ நிறுவனம்?

webteam

சீன ஸ்மார்ட் போன் நிறுவனமான ஓப்போ வரி ஏய்ப்பில் ஈடுபட்டிருப்பதாக வருவாய் புலனாய்வு இயக்குநரகம் தெரிவித்திருக்கிறது. ரூ.4389 கோடி அளவுக்கு கஸ்டம்ஸ் வரியை ஏய்த்திருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஒப்போ அலுவலகம், அந்நிறுவன உயரதிகாரிகளின் வீடுகளில் நடத்தப்பட்ட ஆய்வு மூலம் இந்த ஏய்ப்பு நடந்திருப்பது தெரியவந்திருக்கிறது.

ஒன்பிளஸ், ஒப்போ, ரியல் மீ உள்ளிட்ட பிராண்ட்கள் மூலம் இந்திய சந்தையில் செயல்பட்டு வருகிறது ஒப்போ நிறுவனம். ராயல்டி மற்றும் லைசென்ஸ் கட்டணம் என்னும் பெயரில் பெரிய தொகையை சீனாவுக்கு ஓப்போ அனுப்பி இருக்கிறது. இந்த தொகையை பரிவர்த்தனையாக காண்பிக்கவில்லை என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஒப்போ நிறுவனம் ஏற்கெனவே 450 கோடி ரூபாய் செலுத்தி இருக்கிறது. இன்னும் 3939 கோடி ரூபாய் பாக்கி தொகை செலுத்த வேண்டும் என தெரிகிறது.

சீன நிறுவனங்கள் மீதான நெருக்கடியை மத்திய அரசு அதிகரித்திருக்கிறது. 2020-ம் ஆண்டு எல்லையில் நடந்த பதற்றம் காரணமாக நெருக்கடி அதிகரிக்கப்பட்டிருகிறது. இதுவரை 300க்கும் மேற்பட்ட செயலிகளுக்கு தடை மத்திய அரசு தடை விதித்திருக்கிறது. கடந்த வாரத்தில் விவோ நிறுவனத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. விவோ நிறுவனத்தின் மொத்த வருமானத்தில் 50 சதவீதம் அளவுக்கு முறைகேடாக சீனாவுக்கு அனுப்பபட்டிருப்பதாக அமலாக்கத்துறை தெரிவித்திருக்கிறது.