வணிகம்

சீனாவில் ஆன்லைனில் விற்பனையான விமானம்

webteam

ஆன்லைனில் செல்ஃபோன் வாங்கலாம் கேள்விப்பட்டிருக்கிறோம். சீனாவில் ஒரு நிறுவனம் விமானத்தையே ஆன்லைனில் புக் செய்து வாங்கியுள்ளது 

சீனாவில் போயிங் 747எஸ் ரக தனியார் விமானம் ஒன்று பல ஆண்டுகளாக விலை போகாமல் இருந்தது. ஆறு முறை இந்த விமானத்தை விற்க முயற்சித்தும் விலை போகாததால் இதனை ஆன்லைனில் விற்க அனுமதி வழங்குமாறு அந்த விமான நிறுவனம் தென் சீனாவின் நீதிமன்றத்தை நாடியது. முழு விவரத்தையும் கேட்ட நீதிமன்றம் போயிங் ரக விமானத்தை ஆன்லைனில் விற்பனை செய்ய அனுமதி வழங்கியது. இதனைத் தொடர்ந்து முன்னணி ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனமான அலிபாபா குழுமத்தின் ’டோபாவ்’ பல இடங்களில் இந்த விமானம் விற்பனைக்கு என விளம்பரப்படுத்தியது. 

இந்த விளம்பரத்தை பார்த்த சீனாவின் எஸ்.எஃப் ஏர் கார்கோ' என்ற ஏர்லைன்ஸ் நிறுவனம் 48 மில்லியன் டாலர் செலுத்தி அந்த விமானத்தை ஆன்லைனில் வாங்கியுள்ளது. அந்த நிறுவனம் கேட்டுக்கொண்ட இடத்தில் டெலிவரி செய்து அசத்தியது அலிபாபா நிறுவனம்.ஒரு விமானத்தை ஆன்லைனில் ஆர்டர் செய்து வாங்கும் அளவிற்கு சீனா தனது வணிகத்தில் அதிவேக வளர்ச்சி அடைந்ததை பார்த்து அனைத்து நாடுகளும் திகைத்து வருகின்றன. உலக அளவில் ஆன்லைனில் விமானம் புக் செய்து வாங்கியது இதுவே முதன் முறையாகும்.