வணிகம்

முகேஷ் அம்பானியை பின்னுக்குத்தள்ளிய சீன தொழிலதிபர் - யார் இந்த ‘ஜாங் ஷான்ஷன்’?

முகேஷ் அம்பானியை பின்னுக்குத்தள்ளிய சீன தொழிலதிபர் - யார் இந்த ‘ஜாங் ஷான்ஷன்’?

webteam

முகேஷ் அம்பானி, ஜாக் மா ஆகிய தொழிலதிபர்களை பின்னுக்குத்தள்ளி சீனாவைச் சேர்ந்த தொழிலதிபர் ஜாங் ஷான்ஷன் ஆசிய பணக்காரர் பட்டியலில் முதலிடத்தை இடம்பிடித்துள்ளார். 

சீனாவைச் சேர்ந்தவர் தொழிலதிபர் ஜாங் ஷான்ஷன். தொழிலதிபரான இவர் ஊடகம், காளான் வளர்ப்பு, மருத்துவம் ஆகியத்துறைகளின் கீழ் தொழில் செய்து வருகிறார். இவர் தற்போது இந்தியாவின் மிகப் பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானி, சீனாவின் பிரபல தொழிலதிபரான ஜாக் மா உள்ளிட்டோர்களை முந்தி தற்போது ஆசியாவின் மிகப் பெரிய பணக்காரராக மாறியிருக்கிறார்.

2020 ஆம் ஆண்டு ஜாங் ஷான்ஷனின் சொத்து மதிப்பானது, 70.9 பில்லியன் டாலரில் இருந்து 77.8 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. இதன் மூலம் ஜாங் ஷான்ஷன் உலகின் 11 ஆவது பணக்காரராக மாறியிருக்கிறார். 66 வயது நிரம்பிய இவருக்கு அரசியல் சார்ந்த எந்த தொடர்பும் கிடையாது. அதே போல இவர் பிற பணக்காரர்கள் ஈடுபடும் தொழில்களிலும் ஈடுபடுவதில்லை. இவர் சீனாவின் ‘லோன் வூல்ப்’ என்று அழைக்கப்படுகிறார்.

அவர் வெற்றிப் பெற்றுள்ள இரு துறைகளும், அவருக்கு சம்பந்தமில்லாத துறைகளாகும். கடந்த ஏப்ரல் மாதத்தில், கொரோனா தடுப்பூசி தயாரிப்பு நிறுவனமான பெய்ஜிங் வாண்டாய் மருந்தியல் நிறுவனத்தையும், அடுத்த சில மாதங்களில் நோங்பூ ஸ்பிரிங் கோ தண்ணீர் பாட்டில்கள் தயாரிக்கும் நிறுவனத்தையும் வாங்கினார். தற்போது நுங்பு ஸ்பிரிங் தண்ணீர் பாட்டில் நிறுவனத்தின் பங்குகள் 155 சதவீதமாகவும், வாண்டாய் நிறுவனத்தின் பங்குகள் 2000 சதவீதத்திற்கும் மேலாகவும் உயர்ந்துள்ளது.

முகேஷ் அம்பானி செய்த தொழில் மாற்றங்கள் அவரது சொத்து மதிப்பை 18.3 பில்லியன் டாலரில் இருந்து 76. 9 பில்லியன் டாலராக உயர்த்தியுள்ளது. இந்த வருடம் அம்பானி ஆசியாவின் முதல் பணக்காரர் ஆக ஆவதற்கு முன்பு அந்த  இடத்தில் சிம்மாசனம் போட்டு இருந்தவர் ஜாக் மா. அவரது சொத்து மதிப்பு 61.7 பில்லியன் டாலரில் இருந்து 51.2 பில்லியன் டாலர் ஆக குறைந்துள்ளது.