மத்திய அரசு ஊழியர்கள் புதிய வீடு வாங்குவதற்கான முன்பணம் 25 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட உள்ளது.
8 புள்ளி ஐந்து பூஜ்யம் என்ற வட்டி விகிதத்தில் இந்தத் தொகை வழங்கப்படும் என்று மத்திய அரசின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். இந்தத் தொகையை 20 ஆண்டு காலத்திற்கு திருப்பிச் செலுத்தலாம் என்றும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார். அந்த காலக்கட்டம் முடியும் போது வட்டியுடன் ஊழியர்கள் செலுத்தியிருக்கும் தொகை 51 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயாக இருக்கும் என்றும் அவர் கூறியிருக்கிறார்.