வணிகம்

சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா 600 கிளைகளை மூடுகிறதா?

webteam

பொதுத்துறை வங்கியான சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா 13 சதவீத கிளைகளை மூட இருப்பதாக தெரிகிறது. கடந்த சில ஆண்டுகளாகவே நெருக்கடியில் இருக்கும் இந்த வங்கி நிதி நிலைமையை மேம்படுத்துவதற்காக இந்த கிளைகளை மூட இருக்கிறது. நடப்பு நிதி ஆண்டின் இறுதிக்குள் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் எனத் தெரிகிறது.

சிறபாக செயல்படாத கிளைகள், லாபமீட்டதாக கிளைகளை மூட இருக்கிறது. இதுதவிர வங்கியின் முக்கியம் இல்லாத சொத்துகளை விற்கவும் திட்டமிட்டு வருகிறது. 100 ஆண்டுகளுக்கு மேலாக செயல்படும் வரும் இந்த வங்கியில் 4594 கிளைகள் உள்ளன. இதில் 13 சதவீதம் என்றால் சுமார் 600 கிளைகள் மூடப்படும் எனத் தெரிகிறது.

கடந்த 2017-ம் ஆண்டு முதல் ரிசர்வ் வங்கியின் prompt corrective action நடவடிக்கையில் இந்த வங்கி இருக்கிறது. டிசம்பர் காலாண்டில் வங்கியின் மொத்த வாராக்கடன் 17.2 சதவீதமாக இருக்கிறது. ஆனால் வங்கி இந்த தகவலை உறுதிபடுத்தவில்லை.

- வாசு கார்த்தி