கேரள மாநிலம் இடுக்கியில் ஏலக்காய் விளைச்சல் அதிகரித்துள்ள நிலையில் விலை உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கடந்த மாதம் முதல் ஏலக்காய் உற்பத்தி சராசரியாக இருந்த நிலையில் தற்போது அதிகரித்துள்ளது. இதனைத்தொடர்ந்து ஏலக்காய் விலை அதிகபட்சமாக கிலோ 1000 க்கும், சராசரியாக கிலோ 800 க்கும் ஏலம் போகியுள்ளது.மேலும் அடுத்து வரும் மாதங்களில் ஏலக்காய் விலை நன்கு உயரும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.