வணிகம்

ஏலக்காய் விலை அதிகரிப்பு

ஏலக்காய் விலை அதிகரிப்பு

webteam

கேரள மாநிலம் இடுக்கியில் ஏலக்காய் வரத்து குறைந்ததால் ‌அதன் விலை அதிகரிக்‌கத் தொடங்கியு‌‌ள்ளது.

இந்திய ஏலக்காய் உற்பத்தியில் கேரளா முதலிடம் வகிக்கிறது. கேரளாவின் ஏலக்காய் உற்பத்தியில் இடுக்கி மாவட்டம் முதலிடம் பிடிக்கிறது. மாநிலத்தின் 80 சதவீத ஏலக்காய் உற்பத்தி இடுக்கி மாவட்டத்தில்தான் நடக்கிறது. இடுக்கி மாவட்டத்தில் மட்டும் ஆண்டுக்கு 17 ஆயிரம் மெட்ரிக் டன் ஏலக்காய் உற்பத்தியாகிறது. இந்நிலையில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவ மழை பொய்ததனால் ஏலக்காய் உற்பத்தியில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது.

தற்போது ஏலக்‌‌‌காய் வரத்து குறைந்து‌ள்ளதால் ‌‌‌‌கிலோ ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஏலக்காய்‌, தற்போது ஆயிரத்து மு‌‌ன்னூறு ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஏலக்காய் விலை உயர்வு இடுக்கி மற்றும் தமிழகத்தின் தேனி மாவட்ட ஏலக்காய் விவசாயிகளை மகிழ்ச்சியடைய வைத்தாலும், விலையேற்றத்தின் போது சிறு மற்றும் குறு விவசாயிகளிடையே ஏலக்காய் இருப்பு இல்லதாதது விவசாயிகளுக்கு ஏமாற்றத்தையும் அளித்துள்ளது.