இந்தியாவில் தங்கத்தின் விலை 2025 ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 50% உயர்ந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கம் 1 கிராமுக்கு ₹11825க்கு விற்பனை செய்யப்பட்டு வரலாற்று உச்சத்தை எட்டியுள்ளது. ஆண்டின் துவக்கத்தில் ரூ.60 ஆயிரத்தில் இருந்த ஒரு சவரன் தங்கத்தின் விலை தற்போது கிட்டத்தட்ட ரூ.91 ஆயிரத்தைத் தொட்டிருக்கிறது. ஏறத்தாழ ஒரு ஆண்டுக்குள் ரூ.30 ஆயிரத்திற்கும் மேலாக அதிகரித்திருக்கிறது. இந்நிலையில் தங்கம் வாங்கு செல்லும் போது என்னென்ன விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்? குறிப்பாக எவ்வளவு தங்கத்தை ரெக்கமாக வாங்க முடியும்? அதற்கு என்னென்ன ஆவணங்கள் தேவை? என்பது குறித்து விரிவாக இந்த வீடியோவில் பார்க்கலாம்..
தங்கத்தின் விலை உலக அளவில் வரலாறு காணாத அளவில் உச்சம் தொட்டு வருகிறது.. அதனால் தங்கத்தை , முதலீடாகவும் அந்தஸ்தாகவும் இந்தியாவில் எப்போதும் ஒரு மதிப்புமிக்க சொத்தாகவே மக்கள் கருதுகின்றனர்.. மேலும் தங்கத்தின் விலை இன்னும் அதிகரிப்பதற்கு முன்பாக தங்கத்தை வாங்கி விட வேண்டும் என தங்கத்தை மக்களும் முதலீட்டாளர்களும் வாங்கி வருகின்றனர்.. அதிலும் சிலர் ரொக்கமாக வாங்க விரும்புகிறார்கள், குறிப்பாக பண்டிகை காலங்களிலும் வீட்டில் திருமணம் போன்ற விஷேசங்கள் நடைபெறும் போதும் அதிகமாக தங்கத்தை வாங்குகின்றனர்.. அப்போது பணமோசடி ஏற்படாமல் இருபதற்காக அரசு சில ஒழுங்கு முறைகளை நடவடிக்கைகளை அவ்வப்போது சீரமைத்து வருகிறது.
அதில் இந்தியாவில் தற்போது அமுலில் இருக்கும் விதிமுறைகளின் படி, தங்கத்தை பணமாக கொடுத்து வாங்குவதற்கான வரம்பு ரூ.2 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தங்கம் வாங்கும் போது பணப் பரிமாற்றங்களில் வெளிப்படை தன்மையை உறுதி செய்வதற்காக அரசு இந்த முயற்சியை எடுத்துள்ளது..
மேலும் பணமோசடி தடுப்புச் சட்டம் (PMLA) மற்றும் இந்திய ரிசர்வ் வங்கி (RBI) வழிகாட்டுதல்களின்படி, இந்த ரூ.2 லட்சம் தொகைக்கு மேல் உள்ள எந்தவொரு பரிவர்த்தனையும் வங்கி பரிமாற்றம், டெபிட்/கிரெடிட் கார்டுகள் போன்ற ரொக்கமற்ற முறைகளைப் பயன்படுத்த வேண்டும். அல்லது காசோலை மூலம் நடத்தப்பட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.. இதனால் அந்த பணபரிமாற்றத்தின் தன்மையை உறுதிசெய்து கருப்புப் பணப் புழக்கத்தைத் தடுக்க முடியும் என்கிறது ரிசர்வ் வங்கி..
இதில் தங்கத்தை வாங்கும்போது ஒருவர் ரூ.2 லட்சத்திற்கு மேல் வாங்க விரும்பினால், கண்டிப்பாக அதனை டிஜிட்டல் பரிவர்த்தனை வழிமுறைகள் மூலம் செய்யப்பட வேண்டும், இதற்கு வாங்குபவரின் அடையாளமும் பதிவு செய்ய வேண்டும். இருப்பினும், தொகை ரூ.2 லட்சத்திற்கும் குறைவாக இருந்தால், மொத்தமாக பணமாக கொடுத்து தங்கத்தை வாங்க அனுமதிக்கப்படுகிறார்கள்.. இதிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சில அடையாள அட்டைகளை நகலாக கேட்கலாம் என நகைக்கடைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது..
அத்துடன் ஒருவர் ரூ.2 லட்சத்திற்குக் குறைவான தொகைக்கு தங்கம் வாங்கினாலும், ஒரே பரிவர்த்தனையில் மொத்த கொள்முதல் மதிப்பு ரூ.50,000 ஐத் தாண்டினாலும் பான் கார்டு கட்டாயம் கொடுக்கப்பபட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.. ஆனால் தங்கம் வாங்க ஆதார் தகவல்கள் கட்டாயமல்ல. ஒரு சில தங்க நகை கடைக்காரர்கள் குறிப்பாக நீங்கள் வாங்கும் தங்க நகையின் மதிப்பு வரம்புகளை தாண்டி அதிகமாகும்போது ஆதார் விவரங்களை கேட்கலாம்..
அப்படி உங்களிடம் வாங்கப்படும் பான் கார்டு விவரங்களை சேகரித்த தங்க நகை கடைக்காரர்கள், அதனை வருமான வரித் துறைக்கு சமர்ப்பிப்பார்கள்.. இதனால் பணமோசடி, வரி ஏய்ப்பு மற்றும் கருப்புப் பணப் புழக்கத்தைத் தடுக்க முடியும்.. இந்த மாதிரியான ஒழுங்குமுறை நடவடிக்கைகள் இந்தியாவில் அமலில் உள்ளது.. அதனை நகை கடைக்காரர்களும் கடைபிடித்து வருகின்றனர்.. இந்த விதிமுறைகள் டிஜிட்டல் பண பரிமாற்றங்களை மேலும் ஊக்குவிக்கவும், பணப்பதுக்குதலை தடுக்கவும் அரசு எடுத்துள்ள நடவடிகைக்களில் ஒன்றாகும்..