புதிய வருமான வரி முகநூல்
பட்ஜெட் 2025

புதிய வருமான வரி மசோதா - எப்போது அறிமுகம் ஆகும்?

புதிய வருமான வரி மசோதா அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் அறிவிப்பில் கூறினார்

திவ்யா தங்கராஜ்

புதிய வருமான வரி மசோதா அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் அறிவிப்பில் கூறினார். 63 ஆண்டுகால பழமையான வரி நடைமுறைகள் மாற்றப்படும் என்றும் உரையில் அறிவித்துள்ளார்.

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2025- 2026-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்தார். இதில் புதிதாக Direct Tax Code என்ற பெயரில் புதிய வருமான வரி மசோதா அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்படும் என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.

முன்னதாக கடந்த ஜூலை மாதம் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டின் போதே நேரடி வரி குறியீடு (DTC) குறித்துப் பேசியிருந்தார். அப்போது, “தற்போது அமலில் இருக்கக்கூடிய வருமான வரிச் சட்டங்களை விட புதிதாக வரப்போகும் சட்டம் படிக்கவும் புரிந்து கொள்ளவும் எளிமையாக இருக்கும்” என அவர் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இன்றைய தினம், 63 ஆண்டுகால பழமையான வரி செலுத்தும் நடைமுறைகள் இனி மாற்றப்படும் என பட்ஜெட் உரையில் கூறப்பட்டுள்ளது. இந்த புதிய மசோதா, வருமான வரி செலுத்தும் முறையை எளிதாக்கும் எனக் கருதப்படுகிறது.