வணிகம்

ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் கார்களின் விலைகளை உயர்த்துகிறது BMW இந்தியா!

EllusamyKarthik

வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் BMW ரக வாகனங்களின் விலையை 3.5 சதவிகிதம் வரை உயர்த்த உள்ளதாக தெரிவித்துள்ளது BMW இந்தியா. மூலப்பொருட்கள் விலை உயர்வு, தளவாட செலவுகள் அதிகரிப்பு, சர்வதேச சந்தையில் நிலவும் சூழல் மாதிரியானவை விலை உயர்வுக்கு காரணமாக சொல்லப்படுகிறது. 

BMW 2, 3, 5, 6, 7 சீரிஸ் ரக கார்களின் விலை உயர்கிறது. அதே போல M 340i, X சீரிஸ் மற்றும் மினி கண்ட்ரிமேன் மாதிரியான கார்களின் விலையும் உயர்கிறது. 

இந்திய ரூபாய் மதிப்பில் 5.2 பில்லியனை இந்தியாவில் முதலீடு செய்துள்ளது அந்நிறுவனம். நாட்டின் முக்கிய நகரங்களில் இயங்கி வருகிறது BMW. சென்னையில் உற்பத்திக் கூடம், புனேவில் உதிரி பாகங்களுக்கான கிடங்கு, குருகிராமில் பயிற்சிக் கூடம் மாதிரியானவை உள்ளன. சுமார் 650 பேர் BMW இந்தியா குழுமத்தில் பணியாற்றி வருகின்றனர். தங்களது வாடிக்கையாளர்களுக்காக சுமார் 80 டச் பாயிண்ட்களை இந்தியாவில் கொண்டுள்ளது BMW. இந்தியாவில் இயங்கி வரும் பல்வேறு ஆட்டோமொபைல் நிறுவனங்கள் அவ்வப்போது வாகனங்களின் விலையை உயர்த்தி வருவது குறிப்பிடத்தக்கது.