வணிகம்

சொகுசு கார் விற்பனை: தொடர்ந்து ஏழாவது ஆண்டாக பென்ஸ் முதலிடம்

webteam

சொகுசு கார் விற்பனையில் மெர்சிடென்ஸ் பென்ஸ் நிறுவனம் தொடர்ந்து ஏழாவது ஆண்டாக முதல் இடத்தில் இருக்கிறது. கடந்த நிதி ஆண்டில் பென்ஸ் விற்பனை 12071 ஆக இருக்கிறது. இரண்டாவது இடத்தில் பிஎம்டபிள்யூ (8771)நிறுவனமும் மூன்றாவது இடத்தில் ஆடி (3500) நிறுவனமும் உள்ளன.

இந்த நிறுவனம் 1994-ம் ஆண்டில் இந்தியாவுக்குள் நுழைந்தது. 2007-ம் ஆண்டு ஆடி மற்றும் பிஎம்டபியூ ஆகிய நிறுவனங்கள் இந்திய சந்தைக்கு வந்தன. இதனை தொடர்ந்து 2009-ம் ஆண்டு பிஎம்டபிள்யூ நிறுவனம் சொகுசு கார் பிரிவில் முதல் இடத்தை பிடித்தது. 2013-ம் ஆண்டு ஆடி நிறுவனம் முதல் இடத்தை பிடித்தது. ஆனால் 2015-ம் ஆண்டு மீண்டும் பென்ஸ் முதல் இடத்துக்கு வந்தது. அப்போது முதல் தற்போது வரை தொடர்ந்து 7 ஆண்டுகளாக சொகுசு கார் விற்பனையில் முதல் இடத்தில் பென்ஸ் இருக்கிறது.

டெல்லி, மும்பை, சென்னை, பெங்களூரு, ஹைதராபாத் உள்ளிட்ட முக்கியமான மெட்ரோகளில் பென்ஸ் விற்பனை சிறப்பாக இருக்கிறது. கடந்த ஆண்டு மொத்தமாக சொகுசு கார்களின் விற்பனை 27000 என்னும் அளவில் இருந்தது. நடப்பு நிதி ஆண்டில் பெரிய சவால்கள் எதுவும் இல்லையெனில் 35000 கார்கள் வரை விற்பனையாக கூடும் என இந்த துறையினர் கணித்திருக்கின்றனர்.