வணிகம்

வங்கி ஊழியர் சங்கத்தினர் 2-வது நாளாக வேலை நிறுத்தம்

வங்கி ஊழியர் சங்கத்தினர் 2-வது நாளாக வேலை நிறுத்தம்

jagadeesh

வங்கிகளை தனியார்மயமாக்கும் முடிவை மத்திய அரசு கைவிட வலியுறுத்தி வங்கி ஊழியர் சங்கத்தினர் இரண்டாவது நாளாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பொதுத்துறை வங்கிகளின் பங்குகள் தனியாருக்கு விற்கப்படும் என மத்திய அரசு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் வங்கி ஊழியர்கள், நாடு முழுவதும் 2 நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தை நேற்று தொடங்கினர். சென்னை அண்ணா சாலையில் உள்ள ஸ்பென்சர் பிளாசா அருகே 500-க்கும் மேற்பட்ட வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சுமார் 148 லட்சம் கோடி ரூபாய் மக்களின் சேமிப்பு பணம் வங்கிகளில் இருப்பதாகவும், அவற்றை தனியாருக்கு விற்பது நியாயமற்றது எனவும் வங்கி ஊழியர் சங்கத்தினர் தெரிவித்தனர். ஊழியர்களின் உரிமைகள் பறிக்கப்படுவதோடு, பணியில் இடஒதுக்கீடு முறையும் மறுக்கப்படும் என வங்கி ஊழியர் சங்கத்தினர் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.