வணிகம்

வாகன உற்பத்தியாளர்கள் ஃப்ளெக்ஸ் எரிபொருள் வாகனங்களை உற்பத்தி செய்ய வேண்டும்- நிதின் கட்கரி

EllusamyKarthik

இந்தியாவில் தினந்தோறும் எரிபொருளின் விலையில் மாற்றம் இருந்து வரும் நிலையில் அடுத்த ஆறு மாத காலத்தில் வாகன உற்பத்தியாளர்கள் ஃப்ளெக்ஸ் எரிபொருள் வாகனங்களை உற்பத்தி செய்ய முன்வர வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி. 

“இந்தியாவில் உள்ள வாகன உற்பத்தியாளர்களுக்கு Flex Fuel Vehicles (FFV) மற்றும் Flex Fuel Strong Hybrid Electric Vehicles (FFV-SHEV) ஆகியவற்றைத் தயாரிக்க தொடங்குமாறு இப்போது அரசு அறிவுறுத்தியுள்ளது. இதன் மூலம் பெட்ரோலிய பொருட்களை இறக்குமதி செய்ய நாடு செலவிட்டு வரும் தொகையை வெகுவாக குறைக்கலாம். மறுபக்கம் நமது விவசாயிகளுக்கும் நேரடியான பலன்கள் கிடைக்கும்.

BS-6 விதிமுறைகளுக்கு உட்பட்டு இந்த வாகனங்கள் தயாரிக்கப்பட வேண்டும். 100% பெட்ரோல் அல்லது 100% பயோ-எத்தனால் மற்றும் அவற்றின் கலவைகளின் கலவையில் இயங்கும் திறன் கொண்டவை FFV வாகனங்கள். இதன் மூலம் வாகனங்கள் வெளியிடும் நச்சு நிறைந்த காற்றையும் குறைக்க முடியும்” எனத் தெரிவித்துள்ளார்.