வணிகம்

ஊழியர்களுக்கு 1.5 கோடி ரூபாய் போனஸ் வழங்கிய ஆப்பிள் நிறுவனம்?

EllusamyKarthik

அமெரிக்க நாட்டை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிள் நிறுவனம் தங்கள் நிறுவனத்தின் ஊழியர்கள் சிலருக்கு 1.5 கோடி ரூபாய் வரை ஊக்கத்தொகை வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஊக்கத்தொகையை தங்கள் நிறுவனத்தின் பங்குகளாக ஆப்பிள் வழங்கியுள்ளதாம். 

ஆப்பிள் நிறுவனத்தின் பணியாற்றி வரும் சில பொறியியல் வல்லுனர்களுக்கு மட்டுமே இந்த ஊக்கத்தொகை கிடைத்துள்ளதாம். அதுவும் சாப்ட்வேர் மற்றும் ஹார்டுவேர் இன்ஜினியரிங் பிரிவில் பணியாற்றும் திறன் படைத்த ஊழியர்களுக்கு இது கிடைத்துள்ளதாம். 

அவர்களை தங்கள் நிறுவனத்தில் தொடர்ந்து பணியாற்ற தக்க வைத்துக் கொள்ளும் நோக்கில் ஆப்பிள் இதனை மேற்கொண்டுள்ளதாம். 1 லட்சம் அமெரிக்க டாலர்கள் முதல் 2 லட்சம் அமெரிக்க டாலர்கள் வரை மதிப்பிலான ஆப்பிள் நிறுவன பங்குகளை சன்மானமாக ஊழியர்களுக்கு அளித்துள்ளதாம் ஆப்பிள். 

முன்னதாக கடந்த டிசம்பரில் இதேபோல ஊழியர்களுக்கு ஊக்கத்தொகையை ஆப்பிள் வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. ஆப்பிள் நிறுவன பங்குகளின் விலை தொடர்ச்சியாக ஏறுமுகத்தில் இருந்து வருகிறது. அதனை பெற்றுக் கொண்ட ஊழியர்களுக்கு ‘ஜாக்பாட்’ தான் என சொல்லப்படுகிறது.